தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் மனம் மகிழ்ச்சி அடையக்கூடிய சம்பவங்கள் நடக்கும். குடும்பத்தில் எதிர்பாராத பல நல்ல திருப்பம் வரும். பயணங்கள் வகையில் சில வீண் அலைச்சல் ஏற்படும். குடும்பத்தில் ஏற்படும் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் நாளடைவில் சீராகும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு தள்ளி போடவும். வண்டி, வாகனம் வாங்கும் எண்ணத்தை சிறிது காலம் தள்ளி வைப்பீர்கள். . கடன் தொந்தரவு ஒரு புறம் இருந்து கொண்டே இருக்கும், இருப்பினும் அதை அடைப்பதற்கான புது வழியும் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் இருக்கும். உடன் பிறந்தவர்கள் உங்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வர். உடன்பிறப்பு வகையில் பணம் விரையும் ஏற்படும். பெற்றோர்களிடம் வீண் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புண்டு. தொலைதூர பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். மனதில் உள்ளதை ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேசுவீர்கள். பணம் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை. உடல் நலத்தில் கூடுதல் கவனம் தேவை. உத்யோகத்தில் உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். தொழில், வியாபார தொடர்பான அலைச்சல் அதிகம் இருக்கும். தொழிலில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலையில் ஒரு முடிவை வேகமாக எடுக்க முடியாமல் குழப்பமடையக்கூடும். இதன் விளைவாக பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
சந்திராஷ்டமம் : 13,14,15 ஆகிய தேதிகளில் கவனமாக இருக்கவும், புதிய முயற்சிகள் துவங்கவோ செய்யவோ வேண்டாம்.
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831 Email: alandurastrologer@gmail.com